பஸ்கள் மோதல்; 16 பேர் காயம்


பஸ்கள் மோதல்; 16 பேர் காயம்
x

திருமயம் அருகே பஸ்கள் மோதியதில் 16 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

திருமயம்:

16 பேர் காயம்

திருவாரூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று மதுரை நோக்கி இன்று மாலை புதுக்கோட்டை-காரைக்குடி சாலை திருமயம் அருகே கம்மா சட்டி சத்திரத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது மதுரையில் இருந்து புதுக்கோட்டைக்கு பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பஸ்சும், அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அய்யோ... அம்மா என்று அலறினர். பின்னர் அவர்கள் முண்டியடித்து பஸ்களிலிருந்து இறங்கினார்கள். விபத்தில் தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் உள்பட 16 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் பஸ்கள் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த நமணசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காயமடைந்தவர்களை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.


Related Tags :
Next Story