பஸ்கள் மோதல்; 22 பேர் காயம்
பஸ்கள் மோதலில் 22 பேர் காயம் அடைந்தனர்.
வேலூரில் இருந்து திருத்தணிக்கு அரசு பஸ்சென்று கொண்டிரு்தது. சோளிங்கரை அடுத்த கொடைக்கல்- பெருங்காஞ்சி ஏரிக்கரை இடையே உள்ள வளைவு பகுதியில் சென்றபோது, சோளிங்கரில் இருந்து வாலாஜா நோக்கி சுற்றுலா பஸ் ஒன்று வந்தது. இந்த இரண்டு பஸ்களும் மோதிக்கொண்டன. இதில் அரசு பஸ்சில் பயணம் 22 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் அரசு பஸ் டிரைவர் கண்ணன், முருகேதசன், பர்வேஸ், பரமேஸ்வரி ஆகிய 4 பேர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்து சீரமைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை அரக்கோணம் உதவி போலீஸ்சூப்பிரண்டு யாதவ் கிரிஷ், சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சோளிங்கர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பூரணச்சந்தர், தி.மு.க. வழக்கறிஞர் உதயகுமார், காங்கிரஸ் ஒன்றிய தலைவர் கார்த்திக் ஆகியோரும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.