பஸ் நிறுவன உரிமையாளரின் சகோதரர் கைது


பஸ் நிறுவன உரிமையாளரின் சகோதரர் கைது
x

மோசடிக்கு உடந்தையாக இருந்த வழக்கில் பஸ் நிறுவன உரிமையாளரின் சகோதரர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

மோசடிக்கு உடந்தையாக இருந்த வழக்கில் பஸ் நிறுவன உரிமையாளரின் சகோதரர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

பஸ் நிறுவனம்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் என்ற பெயரில் பஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் மாதம் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார்.

இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர். கடந்த 2020-ம் ஆண்டு வரை முதலீட்டாளர்களுக்கு முறையாக பணம் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர், கடந்த 2021-ம் ஆண்டு கமாலுதீன் இறந்த பிறகு, அவரது மனைவி ரஹானா பேகம், கமாலுதீன் சகோதார் அப்துல் கனி ஆகியோரிடம், முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.

உரிமையாளரின் சகோதரர் கைது

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். போலீசார் கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி, கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மேலாளர் நாராயணசாமி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்ற தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அதன்பிறகு விசாரணையில், சுமார் 6,131 பேரிடம், சுமார் ரூ.410 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ் தலைமையிலான போலீசார், கமாலுதீனுக்கு உடந்தையாக இருந்த 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கமாலுதீன் சகோதரர் அப்துல்கனியை (54) நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story