விபத்தில் பஸ் கண்டக்டர் பலி
ராஜபாளையம் அருகே விபத்தில் பஸ் கண்டக்டர் பலியானார்.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே அயன் கொல்லங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி ராஜா (வயது 35). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்வதற்காக தென்காசி சாலையில் அயன் கொல்லங்கொண்டான் கண்மாய் பாலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புளியங்குடிக்கு ஐஸ் பார் ஏற்றிக்கொண்டு வந்த வேன் எதிர்பாராவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் இசக்கி ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சேத்தூர் புறநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சம்பந்தபுரத்தை சேர்ந்த வேன் டிரைவர் சையது அலி (43) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story