வீட்டு சுவர் மீது பஸ் மோதல்


வீட்டு சுவர் மீது பஸ் மோதல்
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே வீட்டு சுவர் மீது அரசு பஸ் மோதியது.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே வீட்டு சுவர் மீது அரசு பஸ் மோதியது.

மார்த்தாண்டத்தில் இருந்து விரிகோடு, கொல்லஞ்சி வழியாக இனயத்திற்கு நேற்று காலை 7 மணிக்கு ஒரு அரசு பஸ் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் சென்றபோது எதிரே ஒரு வாகனம் வந்துள்ளது. அந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக டிரைவர் பஸ்சை ஒதுக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ் சாலையின் ஓரத்தில் இருந்த சிறிய ஓடையில் இறங்கி, அங்குள்ள வீட்டு காம்பவுண்டு சுவரில் உரசி நின்றது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். எனினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. பின்னர் அதில் இருந்த பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி விரிகோடு சந்திப்பு சென்று வேறு பஸ்களில் சென்றனர். அந்த மார்க்கத்தில் இனயத்திற்கு வேறு பஸ்கள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். பின்னர் மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து வாகனத்தில் வந்து அந்த பஸ்சை அங்கிருந்து மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story