மாணவர்களுக்கு பஸ் வசதி


மாணவர்களுக்கு பஸ் வசதி
x

திசையன்விளை அருகே பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே நவ்வலடி தட்சணமாற நாடார் சங்க சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், திசையன்விளை-கூடங்குளம் அரசு டவுன் பஸ்சில் ஏறி, நவ்வலடி சந்திப்பில் இறங்கி, அங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு சென்றனர். எனவே பள்ளிக்கூடம் வரையிலும் மாணவர்கள் சென்று வரும் வகையில், பஸ் ேசவையை நீட்டிக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் ஆகியோர் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்று, நவ்வலடி சிவந்தி ஆதித்தனார் பள்ளிக்கூடம் வரையிலும் அரசு டவுன் பஸ்கள் காலையிலும், மாலையிலும் சென்று மாணவ-மாணவிகளை ஏற்றி இறக்கி செல்கிறது. பள்ளிக்கூடம் வரையிலும் நீட்டிக்கப்பட்ட பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தலைமை ஆசிரியர் ராஜராஜன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பஸ்சில் பயணம் செய்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story