அடிக்கடி பழுதானதால் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்


அடிக்கடி பழுதானதால்  பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்
x
திருப்பூர்


குடிமங்கலம் அருகே பழுதடைந்த பஸ்சை மாற்றக்கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஸ் சிறைபிடிப்பு

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே சனுப்பபட்டி உப்பாறு ஓடையில் கடந்த மாதம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசு பஸ்சை அதே வழித்தடத்தில் அரசு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. விபத்துக்குள்ளான பஸ் என்பதாலும், அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் இதனால் பழுதடைந்த பஸ்சை மாற்றி நல்ல நிலையில் உள்ள பஸ்சை இயக்க வேண்டும் என வலியுறுத்தி உடுமலையிலிருந்து அம்மாபட்டி சென்று திரும்பும் போது எஸ்.வல்ல குண்டாபுரத்தில் பொதுமக்கள் பஸ்ஸை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இதுகுறித்து தகவல் அறிந்த குடிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் குடிமங்கலம் போலீசார் மற்றும் கிளை மேலாளர் புதிய பஸ்சை மாற்றி தருவதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story