முத்துப்பேட்டைக்கு பஸ் இயக்க வேண்டும்


முத்துப்பேட்டைக்கு பஸ் இயக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் இருந்து களப்பால், பெருகவாழ்ந்தான் வழியாக முத்துப்பேட்டைக்கு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கோட்டூர்:

திருத்துறைப்பூண்டியில் இருந்து களப்பால், பெருகவாழ்ந்தான் வழியாக முத்துப்பேட்டைக்கு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய தாலுகாவில் இணைப்பு

கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மீனம்பநல்லூர். கீழப்புத்தூர். சீலத்தநல்லூர். நல்லநாயகிபுரம், குறிச்சிமூளை. குலமாணிக்கம், களப் பால், வெங்கத்தான்குடி, வேதபுரம், நல்லூர், சிங்கமங்கலம், தெற்குநாணலூர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்துப்பேட்டை தாலுகாவில் இணைக் கப்பட்டுள்ளது.

இந்த கிராமங்களில் இருந்து முத்துப்பேட்டைக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இப்பகுதி பொதுமக்கள் முத்துப்பேட்டை தாலுகா அலுவலகத்திற்கு தினமும் 1,000-க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.

பஸ் இயக்க வேண்டும்

இவர்கள் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டி மற்றும் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மன்னார்குடி சென்று தான் முத்துப்பேட்டைக்கு வரவேண்டும்.இதனால் பல்வேறு கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். எனவே திருத்துறைப்பூண்டியில் இருந்து களப்பால், வேதபுரம், செந்தாமரைக்கண், பெருகவாழ்ந்தான் வழியாக முத்துப்பேட்டைக்கு தினமும் முழு நேரமும் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைவரும் பயன்பெறுவார்கள்

இதுகுறித்து களப்பால் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா பாஸ்கர் கூறுகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்துப்பேட்டை தாலுகா அலுவலகத்திற்கு இப்பகுதி மக்கள் சென்று வருவதற்கு நேரடியான பஸ் வசதி கிடையாது.

திருத்துறைப்பூண்டியில் இருந்து களப்பால், வேதபுரம். பெருக வாழ்ந்தான் வழியாக முத்துப்பேட்டைக்கு பஸ் இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கினால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயன்பெறுவார்கள்.

ஊராட்சியில் தீர்மானம்

இதுதொடர்பாக ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ளோம். விரைவில் இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறோம் என்றார்.


Related Tags :
Next Story