சுவரொட்டி ஒட்டும் இடமாக மாறிய பயணிகள் நிழலகம்
சுவரொட்டி ஒட்டும் இடமாக மாறிய பயணிகள் நிழலகம் மாறி உள்ளது.
நாகப்பட்டினம்
திருமருகலில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்கக்கல்வி அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், துணை மின் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில் திருமருகல் பஸ் நிறுத்தம் பகுதியில் அடிப்படை வசதிகள் குறைபாடாக உள்ளது. பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழலகத்தில் இருக்கைகள் சேதமடைந்து பயணிகள் உட்கார முடியாத நிலை உள்ளது. இதன் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள கழிவறையில் தண்ணீர் வசதி இல்லை. மேலும் பயணிகள் நிழலக கட்டிடம் முழுவதும் சுவரொட்டிகள் தொடர்ந்து ஒட்டப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் நிழலகம் சுவரொட்டி ஒட்டும் இடமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
Related Tags :
Next Story