பஸ் நேரத்தை மாற்ற கோரிக்கை


பஸ் நேரத்தை மாற்ற கோரிக்கை
x

பஸ் நேரத்தை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தா.பழூர்:

தா.பழூர் அருகே தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை கூட்டம் நடைபெற்றது. கிளை பொறுப்பாளர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அன்பழகன், மனோகரன், செல்வராஜ், சுந்தரமூர்த்தி, முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் ராமநாதன் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில், தென்கச்சிபெருமாள்நத்தம் கிராமத்திற்கு வந்து செல்லும் 3 ஏ அரசு டவுன் பஸ் அதிகாலை 5.45 மணிக்கும், இரவில் 9 மணிக்கும் வந்து செல்கிறது. இதனால் எந்த பயனும் இல்லை என்று நீண்ட நாட்களாக மக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் பகல் நேரத்தில் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்திற்கு டவுன் பஸ் இயக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே அந்த பஸ் வந்து செல்லும் நேரத்தை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story