புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
காளாச்சேரி மன்னார்குடி இடையே புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
காளாச்சேரி மன்னார்குடி இடையே புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதிய வழித்தடம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள காளாச்சேரியில் இருந்து மன்னார்குடி வரை புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த பஸ் மன்னார்குடியில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு 8.35 மணிக்கு காளாச்சேரி வந்தடையும். அதேபோல மாலை 5.15 மணிக்கு மன்னார்குடியில் இருந்து காளாச்சேரிக்கு பஸ் இயக்கப்படுகிறது. 6.30 மணிக்கு திரும்பி மன்னார்குடி செல்லும் வகையில் பஸ் இயக்கப்படுகிறது.
அதிகாரிகள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, போக்குவரத்துக்கழக நாகை மண்டல பொதுமேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் (வணிகம்) சிதம்பரகுமார், கோட்ட மேலாளர் செந்தில்குமார், காளாச்சேரி ஊராட்சி மன்றத்தலைவர் அமுதா கரிகாலன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆறுமுகம், மன்னார்குடி கிளை மேலாளர் மதன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.