ஏ.டி.எம்.மில் பணம் வராததால் அரசு பஸ் கண்ணாடி உடைப்புதிருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு


ஏ.டி.எம்.மில் பணம் வராததால் அரசு பஸ் கண்ணாடி உடைப்புதிருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏ.டி.எம்.மில் பணம் வராததால் அரசு பஸ் கண்ணாடியை ஒருவர் உடைத்தாா்.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துளசி மகன் நாகராஜ் (வயது 42). இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் ஆனத்தூரில் ஒரு வங்கி முன்பு இருந்த ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது, அங்கு பணம் வரவில்லை. இதையடுத்து, வங்கி ஊழியர்களிடம் பணம் ஏன் வரவில்லை என்று கேட்டு, அவர்களிடம் பிரச்சினை செய்து, அரசூர் - பண்ருட்டி சாலையில் நின்று ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து அரசூர் வழியாக பண்ருட்டி நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். அப்போது நாகராஜ் கல்வீசி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, டிரைவர், கண்டக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நாகராஜ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story