குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பூசணிக்காய் சாகுபடி


குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பூசணிக்காய் சாகுபடி
x
திருப்பூர்


குடிமங்கலம் பகுதியில் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பூசணிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.

பூசணி சாகுபடி

குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குகிணற்று பாசனம் மூலம் காய்கறி சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது.தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில் தென்னையின் ஊடுபயிராக காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.

பூசணி மற்றும் பரங்கிக்காய் உணவுக்காக அதிக அளவில் பயன்படுகிறது. நாட்டுப்பூசணியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதால் மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது குடிமங்கலம் பகுதியில் விவசாயிகள் குறைந்த அளவு நீரைக் கொண்டு சாகுபடி செய்யக்கூடிய பூசணி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறைந்த செலவு

பூசணி சாகுபடி செய்வது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:- பூசணி சாகுபடி செய்வதற்கு குறைந்த நீர், குறைந்த செலவு, குறைந்த வேலையாட்கள் போதுமானது.

செம்மண் பூமியில் பூசணிக்காய் நன்கு வளரும் தன்மையுடையது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் பூசணிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 300 குழிகள் அமைத்து ஒரு இன்ச் ஆழத்தில் விதைகளை இட்டு மண்ணால் மூடிவிடவேண்டும்.

பூசணிக்கு வறட்சிகாலத்தில் வாரத்திற்கு 2 முறையும் மற்ற காலங்களில் வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. விதைத்த 60 முதல் 70 நாட்களுக்குள் பூசணிக்காய் அறுவடைக்கு தயாராகிவிடும்.

பூசணி விதைக்கு தனி செலவு செய்ய வேண்டியதில்லை ஒரே முறை விதை வாங்கினாலே போதுமானது. விளைகிற பூசணியில் இருந்து விதைகளை எடுத்து அடுத்தடுத்துபயிர் செய்யலாம். நாட்டுரகமே நல்ல விளைச்சலைக் கொடுக்கக்கூடியது.ஒரு ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் கிடைக்கும்.

விதை, உரம் அறுவடை, வண்டிசெலவு என ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே செலவாகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் தரும் தொழிலாக பூசணிக்காய் சாகுபடி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story