புதர் மண்டி கிடக்கும் வீடுகள்


புதர் மண்டி கிடக்கும் வீடுகள்
x
தினத்தந்தி 9 July 2023 3:05 AM IST (Updated: 10 July 2023 5:22 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே குடிசை மாற்று வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்டு புதர் மண்டி கிடக்கும் வீடுகளை அதிகாரிகள் கவனித்து பயனாளிகளை விரைந்து தேர்வு செய்து வீடுகளை ஒதுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

வல்லம், ஜூைல.9-

தஞ்சை அருகே குடிசை மாற்று வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்டு புதர் மண்டி கிடக்கும் வீடுகளை அதிகாரிகள் கவனித்து பயனாளிகளை விரைந்து தேர்வு செய்து வீடுகளை ஒதுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்புகள்

தஞ்சை அருகே உள்ள வல்லம்- மருத்துவக் கல்லூரி சாலையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 384 வீடுகள் கொண்ட அடுக்குமாடு குடியிருப்பு கடந்த 2020-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த குடியுருப்பு வீடுகள் கட்டி முடித்த போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியது. இதனால் கொரோனா சிகிச்சை மையமாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு நோயாளிகள் இந்த குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.இந்தநிலையில் நகரங்களில் வீடு இல்லாதவர்கள், ஏழை எளியோர், மாற்றுத்திறனாளிகள், அரசு இடங்களில் குடியிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரிடம் இருந்து வீடு ஒதுக்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

புதா் மண்டி கிடக்கும் அவலம்

இந்த குடியிருப்புகளை சுற்றி உள்ள பகுதிகள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் வேலிக்கருவை மற்றும் புல் புதர்கள் செடி கொடிகள் மண்டி கிடக்கின்றன. மேலும் குடியிருப்பு சுவர்களிலும் மரக்கன்றுகள் முளைத்து காணப்படுகின்றது. மேலும் வீடுகளின் ஜன்னல்கள் பல உடைந்து காணப்படுகிறது. எனவே பயனாளிகளை விரைந்து தேர்வு செய்து வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமதம்

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

வல்லத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 384 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகள் 2 ஆண்டுகள் கோவிட் மையமாக செயல்பட்டதால் அப்போது வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் கோவிட் மையத்திலிருந்து விலக்கு பெற்ற பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகாம் அமைத்து பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தில் இருந்து வர வேண்டிய பயனாளிகள் பட்டியல் நிலுவையில் உள்ளது. இதனால் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பயனாளிகள் பட்டியல் வந்ததும் குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்புதல் பெற்று பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 400 சதுர அடி கொண்ட வீடுகள் ஒதுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Next Story