தூத்துக்குடியில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்


தூத்துக்குடியில் தொழில்  பழகுனர் சேர்க்கை முகாம்
x

தூத்துக்குடியில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் 11-ந்தேதி நடக்கிறது என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.

முகாம்

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 11-ந் தேதி காலை 9 மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது.

இந்த முகாமில் இதுவரை தொழில் பழகுனர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்கள் மற்றும் 2017-18, 2018-19, 2019-20, 2020-21 ஆகிய வருடங்களில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ. பயிற்சியாளர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலரும்) அனைவரும் கலந்து கொள்ளலாம்.

சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் பெரும நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழில் பழகுனர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின்போது உதவித்தொகை மாதம் ரூ.7 ஆயிரத்து 700 முதல் ரூ.10 ஆயிரம் வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும்.

தொழில் பழகுனர் சட்டம் 1961-ன்படி, இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும். எனவே மாணவர்கள் இந்த சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு...

மேலும் இதுதொடர்பான விவரங்களை அறிய கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2340041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பயிற்சி அலுவலர் கனகராஜ்– - 63831 32166, உதவி பயிற்சி அலுவலர் விஜயகுமார் -– 91766 98333 ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story