ஜுலை 4ல் சென்னையில் தொழில் முதலீட்டு மாநாடு - அமைச்சர் தங்கம் தென்னரசு


ஜுலை 4ல் சென்னையில் தொழில் முதலீட்டு மாநாடு  - அமைச்சர் தங்கம் தென்னரசு
x

சென்னை ,தாஜ் ஓட்டலில் வரும் 4ஆம் தேதி தொழில் மாநாடு நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது ;

தாஜ் ஓட்டலில் வரும் 4ஆம் தேதி தொழில் மாநாடு நடைபெறும்.கடந்த கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.94,975 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

நான் முதல்வன் திட்டத்தால் இளைஞர்களுக்கு திறன்மேம்பாடு வழங்கப்படுகிறது.29 திட்டங்களுக்கு நிலம் அடையாளம் காணும் பணி நிறைவடைந்துள்ளது .மேலும் 25 திட்டங்கள் அனுமதி பெறும் நிலையில் உள்ளது .

உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் அ மைய இருக்கிறது.தமிழ்நாட்டில் ஒராண்டு காலத்தில் தொழிற்துறை மாபெரும் மறுமலர்ச்சி அடைந்துள்ளது.

இதுவரை 132 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது .கோவை, மதுரை மாவட்டங்களில் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமையவுள்ளது என அவர் தெரிவித்தார்தார்.


Next Story