தொழில் கடன் வழங்கும் முகாம்


தொழில் கடன் வழங்கும் முகாம்
x

தொழில் கடன் வழங்கும் முகாம்

தஞ்சாவூர்

பாபநாசம் தாலுகாவில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க அலுவலக கட்டிட வளாகத்தில் தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மக்களுக்கான தொழில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட பிறப்படுத்தப்பட்ட நலத்துறையின் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பாபநாசம் நகர கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் செல்வி முன்னிலை வகித்தார். இதில் அம்மாப்பேட்டை கூட்டுறவு சார்பதிவாளர் விஜயமாலா, உமையாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் குமாரராஜன், கணபதி அக்ரஹாரம் கூட்டுறவு வங்கி செயலாளர் அமலநாதன், கபிஸ்தலம் கூட்டுறவு வங்கி செயலாளர் ரவி, உமையாள்புரம் ஆவின் தலைவர் ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் செந்தில்குமார், உதவியாளர் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக 50 பேருக்கு தொழில் கடன் பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது. பூர்த்தி செய்து வழங்கப்பட்ட அனைத்து விண்ணப்பத்தினையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து நகர கூட்டுறவு வங்கிக்கும், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கும் கடன் வழங்குவதற்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story