தமிழகத்தில் முடங்கிய தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க வேண்டும் -விக்கிரமராஜா கோரிக்கை


தமிழகத்தில் முடங்கிய தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க வேண்டும் -விக்கிரமராஜா கோரிக்கை
x

தமிழகத்தில் முடங்கிய தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க வேண்டும் விக்கிரமராஜா கோரிக்கை.

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பணமதிப்பு இழப்பீடு மற்றும் கொரோனா கால பேரிடர்களால் தொழில் துறையும், வணிகமும் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றன. இக்கால கட்டங்களில் பணப்புழக்கம் குறைவு காரணமாகவும், முதலீடு பற்றாக்குறையினாலும் வணிக வீழ்ச்சியினாலும், பல்வேறு தடைகளை தொழில் துறை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அதன் விளைவுகளால் பல்வேறு தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் மூடப்படும் நிலை உருவாக்கப்பட்டது.

தொழிற்சாலைகளிலும், வணிக நிறுவனங்களிலும் பணியாற்றி வந்த பணியாளர்களின் பணி இழப்பும், வணிக இழப்புக்கும் பணப்புழக்க குறைவுக்கும் காரணமாக அமைந்தது. அதனால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை இன்றுவரை நீடித்துக்கொண்டிருக்கின்றது.

இதனால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை புனரமைத்து, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், வேலை வாய்ப்பை இழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு அளித்திடவும், முதல்-அமைச்சர் துறை சார்ந்த அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட தொழில் முனைவோரையும் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story