தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நெற்குப்பை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). மீன் பண்ணை தொழிலதிபரான இவருக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு உடலில் ஏற்பட்ட சில பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் உடலில் அடிக்கடி கடுமையான வலி ஏற்பட்டு செந்தில்குமார் அவதி அடைந்து வந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் அவருக்கு முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story