உடுமலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பஸ் நிறுத்தங்களை இடம் மாற்றம் செய்வதற்கான ஆய்வு நடந்தது.


உடுமலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பஸ் நிறுத்தங்களை இடம் மாற்றம் செய்வதற்கான ஆய்வு நடந்தது.
x

உடுமலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பஸ் நிறுத்தங்களை இடம் மாற்றம் செய்வதற்கான ஆய்வு நடந்தது.

திருப்பூர்

உடுமலை

உடுமலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பஸ் நிறுத்தங்களை இடம் மாற்றம் செய்வதற்கான ஆய்வு நடந்தது.

பஸ் நிறுத்தம்

உடுமலை தளி சாலையில் இருந்து கச்சேரி வீதிக்கு திரும்பும் சந்திப்பில் கச்சேரி வீதியில் பயணிகள் நிழற்குடையுடன் பஸ் நிறுத்தம் உள்ளது. தளிசாலை போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாகும். கச்சேரி வீதியில் தாலூகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், குடிமைப்பொருள் தனிதாசில்தார் அலுவலகம், சமூகபாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகம், தபால் அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கி, கோர்ட்டுகள், தனியார் அலுவலகங்கள் ஆகியவை உள்ளன.

இந்த இடங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் பஸ்சுக்காக கச்சேரி வீதி-தளிசாலை சந்திப்பில்தான் காத்திருப்பது வழக்கம்.தளி சாலையில் வரும்பஸ்கள் அந்த சந்திப்பு பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும். அந்த நேரத்தில் தளிசாலை மற்றும் கச்சேரி வீதியில் மற்ற வாகனங்கள் சென்று வர போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.சில நேரங்களில் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் வந்துசெல்வதற்கும் இடையூறு ஏற்படுகிறது.

அதிகாரிகள் ஆய்வு

எனவே போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பஸ் நிறுத்தங்களை பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்து இடம்மாற்றம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நகராட்சி தலைவர் மு.மத்தீன் முன்னிலையில், ஆணையாளர் பி.சத்தியநாதன் தலைமையில் பொறியாளர் மோகன், நகரமைப்பு அலுவலர் கோவிந்தராஜன், நகரமைப்பு ஆய்வாளர் பழனிக்குமார்,

போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்துத்துறை, தமிழ்நாடுஅரசு போக்கு வரத்து கழகம் ஆகிய துறை அதிகாரிகள் கூட்டாக கள ஆய்வு மேற்கொண்டனர்.

பஸ் நிறுத்தங்கள் மாற்றம்

அதன்படி தளிசாலை சந்திப்பில் கச்சேரி வீதியில் உள்ள பஸ் நிறுத்தத்தை அந்த இடத்தை அடுத்துள்ள பகுதியில் தளிசாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகிலும், தளிசாலையில் யூனியன் ஆபீஸ் முன்புறம் உள்ள பஸ்நிறுத்தம் தெற்குநோக்கி செல்லும் பஸ்கள் நின்று செல்லும் வகையில் எஸ்.என்.ஆர்.நகர் எதிரிலும், வடக்குநோக்கி வரும் பஸ்கள் காமாட்சி அம்மன் கோவில் அருகில் நின்று செல்லும் வகையிலும் பஸ்நிறுத்தங்களை மாற்றியமைப்பது.இந்த பணிகளை நகராட்சி நிர்வாகம் விரைவில் மேற்கொள்வது.

மேலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள ராஜேந்திரா சாலையில் பழனி சாலை சந்திப்பில் இருந்து அண்ணா பூங்காவரை முதல் கட்டமாகவும், அங்கிருந்து ரெயில் நிலையம் வரை அடுத்தகட்டமாகவும் சாலையின் நடுவில் மையத்தடுப்பு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.Next Story