கோபி அருகே பரபரப்பு:செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்


கோபி அருகே பரபரப்பு:செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
x

கோபி அருகே -செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

ஈரோடு

கோபி அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளி

கோபி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் மருதாசலம். இவருைடய மனைவி பாப்பாத்தி. இவர்களுடைய மகன் முருகன் (வயது 36). கூலித்தொழிலாளி.

இந்த நிலையில் முருகன் நேற்று காலை 9 மணி அளவில் கோபி அருகே உள்ள புதுக்கரைபுதூருக்கு சென்றார். பின்னர் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான 150 அடி உயரம் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏற தொடங்கினார்.

தற்கொலை மிரட்டல்

சிறிது நேரத்தில் செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற அவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை கண்டதும் இதுபற்றி கோபி தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்த தகவல் அந்த பகுதியில் பரவியது. இதைத்தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் அங்கு கூடினர்.

இதனிடையே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் அதை ஏற்காமல் கீழே குதித்துவிடுவேன் என மிரட்டியபடி இருந்தார். மேலும் முருகனின் தாய் பாப்பாத்தியும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

மீட்பு

பின்னர் அவர் போலீசாரின் மைக் மூலம் செல்போன் உயர் கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்த தனது மகனை கீழே இறங்குமாறு அழுதபடி வேண்டுகோள் விடுத்தார். அப்போது முருகனிடம் தீயணைப்பு வீரர்கள் பேச்சு கொடுத்தபடியே நைசாக மேேல ஏறி சென்று கயிறு கட்டி பத்திரமாக மீட்டு 10.40 மணி அளவில் கீழே கொண்டு வந்தனர். அப்போது முருகன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீட்கப்பட்ட முருகனை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முருகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பரபரப்பு 

விசாரணையில், 'குடும்ப பிரச்சினை காரணமாக முருகனை அவருடைய உறவினர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த அவர் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து முருகன் நேற்று வெளியேறி குடிபோதையில் புதுக்கரைப்புதூருக்கு சென்று செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது,' தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ெபரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story