நெல்லை மார்க்கெட்டுகளில் பொங்கல் பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.


நெல்லை மார்க்கெட்டுகளில் பொங்கல் பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.
x

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் மார்க்கெட்டுகளில் பொங்கல் பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. கத்தரிக்காய் ரூ.100-க்கு விற்பனையானது.

திருநெல்வேலி

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் மார்க்கெட்டுகளில் பொங்கல் பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. கத்தரிக்காய் ரூ.100-க்கு விற்பனையானது.

பொங்கல் பொருட்கள்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளை விமரிசையாக கொண்டாட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த 10 நாட்களாக தயாராகி வருகிறார்கள்.

பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கி சேகரித்து வைத்துள்ளனர். இதனால் பொங்கல் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதையொட்டி நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநகரின் அனைத்து பகுதிகளிலும் வியாபாரிகள் பொங்கல் பொருட்களை கொண்டு வந்து விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.

பானைகள், பனை ஓலைகள்

நெல்லையில் மண் பானைகள் ரூ.100 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. 3 அடுப்பு கட்டிகள் ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வீதிகளில் பனை ஓலைகள் விற்கப்பட்டு வருகிறது. 4 ஓலைகள் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கரும்புகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு குவிக்கப்பட்டு உள்ளன. 10 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.300 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது.

மஞ்சள் குலைகள் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகள், கிழங்குகள்

மேலும் நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மொத்த மார்க்கெட் மற்றும் பாளையங்கோட்டை மார்க்கெட், உழவர் சந்தைகளில் நேற்று அதிகளவு காய்கறிகள், கிழங்குகள் விற்பனை ஆனது.

நெல்லை நயினார்குளம் காய்கறி மொத்த மார்க்கெட்டில் சிறு கிழங்கு, சேனை கிழங்கு, கருணை கிழங்கு, சேமங்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு கிழங்கு வகைகள் நேற்று அதிகளவு விற்பனைக்கு வந்திருந்தது. அவற்றை சிறு வியாபாரிகள் வாங்கி சென்று கடைகளில் விற்பனை செய்தார்கள்.

கத்தரிக்காய் ரூ.100

இதேபோல் காய்கறிகளையும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றார்கள். பாளையங்கோட்டை மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலை ஏறுமுகத்தில் இருந்தது. நேற்று பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் 1 கிலோ வெள்ளை கத்தரிக்காய் ரூ.100-க்கு விற்பனை ஆனது. சில்லறை விற்பனை கடைகளில் 1 கிலோ கத்தரிக்காய் ரூ.120 வரை விற்கப்பட்டது.

இதேபோல் கீரி பச்சை கத்தரி ரூ.50, கீரி வைலட் கத்தரி ரூ.35 ஆக விற்கப்பட்டது. தக்காளி விலையும் சற்று உயர்ந்து ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டது. வெண்டைக்காய் விலையும் ரூ.50-ஐ தாண்டியது. இருந்த போதிலும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் மும்முரமாக உள்ளனர். இதனால் பஜார், மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் கூட்டம் அலைமோதியது.


Next Story