13-வது வார்டு இடைத்தேர்தல்; 64 சதவீத வாக்குப்பதிவு


13-வது வார்டு இடைத்தேர்தல்; 64 சதவீத வாக்குப்பதிவு
x

13-வது வார்டு இடைத்தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடியில் 13-வது வார்டு இடைத்தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.

இடைத்தேர்தல்

இளையான்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் 13-வது வார்டு உறுப்பினராக இருந்த மிர்சா (தி.மு.க.) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாநில தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் நிறைவு பெற்று களத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஏற்கனவே இதே வார்டில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதால் இடைத்தேர்தலில் விறுவிறுப்பு கூடியுள்ளது. தி.மு.க. சார்பில் பேரூர் கழக செயலாளர் நஜிமுதீன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளர்கள் சுயேச்சை சின்னங்களில் போட்டியிடுகின்றனர்.

64 சதவீத வாக்குப்பதிவு

இளையான்குடி மேலப்பள்ளி வாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தேர்தல் முடிவுகள் 12.7.2022 அன்று காலை 8 மணி முதல் பேரூராட்சி அலுவலகத்தில் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

மொத்தம் 1,175 வாக்காளர்களில் ஆண்கள்-360, பெண்கள்- 397 பேர் வாக்களித்தனர். மொத்தம் 64 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தேர்தல் அலுவலர் கோபிநாத், உதவி அலுவலர் ரமேஷ், தேர்தல் மேற்பார்வையாளர் கந்தசாமி ஆகியோர் வாக்கு பதிவினை நடத்தினர்.



Next Story