ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல்


ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல்
x

ஏனங்குடிஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்கள்

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதற்காக 5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.தேர்தல் விதிமீறல்களை தடுக்க கண்காணிப்பு பணியில் பறக்கும் படை குழுக்களும், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபட்டனர். வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 3,240 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 1,162 பேரும், பெண் வாக்காளர்கள் 1,348 பேரும் என மொத்தமாக 2,510 பேர் வாக்களித்தனர்.இந்த வாக்குகள் வருகிற 12-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.அதேபோல் ஆதலையூர் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், வேட்டைக்காரனிருப்பு ஊராட்சி 12-வார்டுக்கான ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடந்தது.



Next Story