போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு பள்ளிக்கூட ஆசிரியை மீது 4 பிரிவுகளில் வழக்கு


போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு பள்ளிக்கூட ஆசிரியை மீது 4 பிரிவுகளில் வழக்கு
x

கவுந்தப்பாடி அருகே போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு பள்ளிக்கூட ஆசிரியை மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு பள்ளிக்கூட ஆசிரியை மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆசிரியை

கவுந்தப்பாடி காந்திபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மனைவி ஏசுமரியாள் (வயது 53). இவர் கடந்த 1992-ம் ஆண்டு ஆசிரியர் பட்டய படிப்பு படித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இவர் கடந்த 1996-ம் ஆண்டு முதல் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்ததாக தெரிகிறது. மேலும் கடந்த 2007-ம் ஆண்டு முதல் இவர் கவுந்தப்பாடி அருகே தென்காட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்தில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்து உள்ளார்.

போலி மதிப்பெண் சான்றிதழ்

இந்த நிலையில் ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் தங்களுடைய சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து கண்டறிய அதை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து பல ஆசிரியர்கள் தங்களுடைய சான்றிதழ்களை அரசிடம் சமர்ப்பித்திருந்தனர். அதில் உண்மை தன்மை குறித்து கண்டறியப்பட்டதில் ஏசுமரியாளின் மதிப்பெண் சான்றிதழ் போலி என தெரியவந்தது.

வழக்கு

இதையடுத்து ஏசுமரியாள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்ததாக கவுந்தப்பாடி போலீசில் பவானி வட்டார கல்வி அதிகாரி கேசவன் புகார் அளித்தார். அதன்பேரில் ஏசு மரியாள் மீது 4 பிரிவுகளின் கீழ் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story