இடைத்தேர்தலுக்காக சட்ட ஆலோசனை மையம் திறப்பு- அமைச்சர்கள் பங்கேற்பு
இடைத்தேர்தலுக்காக சட்ட ஆலோசனை மையம் திறப்பு- அமைச்சர்கள் பங்கேற்பு
ஈரோடு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் சட்ட ஆலோசனை மையம் திறக்கப்பட்டு உள்ளது. ஈரோடு பெரியார் நகரில் திறக்கப்பட்டு உள்ள இந்த சட்ட ஆலோசனை மைய திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சட்ட ஆலோசனை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, செந்தில்பாலாஜி ஆகியோரும் கலந்து கொண்டனர். மையத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு அங்கு கணினி செயல்பாட்டையும் தொடங்கி வைத்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. கூட்டணி சார்ந்த சட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்த மையத்தில் தெரிவித்து ஆலோசனை பெறலாம். மாநில வக்கீல் அணி நிர்வாகி ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த மையம் செயல்படும் என்று தி.மு.க. கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story