ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தீவிர வாக்குசேகரிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தீவிர வாக்குசேகரிப்பு
ஈரோடு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. தலைவர்கள், அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சினத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
அதன்படி தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஈரோடு கிழக்கு தொகுதி 46-வது வார்டுக்கு உட்பட்ட 200, 201, 202 ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவருடன் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story