ஆற்காட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும்
ஆற்காட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக ஆற்காடு திகழ்கிறது. இங்கு பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள் ஆவார். விவசாயிகளும் உள்ளனர். ஆற்காடு நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆரணியில் இருந்து ஆற்காடு வரும் பஸ், கார் மற்றும் கனரக வாகனங்கள் நகருக்குள் வந்துதான் பஸ் நிலையத்தை அடைய முடியும். இதற்கு புறவழிச் சாலை இல்லாததால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
புறவழிச்சாலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் இதுவரை எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் புறவழிச் சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.