கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்


கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாகையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம்


தனியார் சேனல்களின் கட்டண உயர்வை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பாப்பாகண்ணன் முன்னிலை வகித்தார்.

தனியார் சேனல்களின் கட்டண உயர்வை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதில் நாகை, கீழ்வேளூர், திருமருகல், கீழையூர், தலைஞாயிறு, வேதராண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story