கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கட்டண சேனல்களின் விலையை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கியதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழக கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கட்டண சேனல்களின் விலையை உயர்த்திக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கேபிள் டி.வி ஆபரேட்டர் சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் மகாபாரதியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.