விதிமீறல்கள் குறித்து புகார் கொடுத்த விவசாயிகளுக்கு கல்குவாரி உரிமையாளர்கள் மிரட்டல்
விதிமீறல்கள் குறித்து புகார் கொடுத்த விவசாயிகளை கல்குவாரி உரிமையாளர்கள் மிரட்டுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தனர்.
கல்குவாரிகள் விதிமீறல்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் கல்குவாரிகளில் விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. விதிகளை மீறி கனிம வளங்கள் எடுக்கப்படுவது குறித்து புகார்கள் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.
மரிக்குண்டு, சுப்புலாபுரம் பகுதிகளில் கல்குவாரி விதிமீறல் குறித்து விவசாயிகள் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த புகார் மனுவின் நகலை சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அனுப்பி உள்ளனர். இதனால் மனு கொடுத்த விவசாயிகளை குவாரி உரிமையாளர்கள் மிரட்டுகின்றனர். பாலூத்து பகுதியில் இருந்த மலை கரடுகள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளன. எனவே கனிம வள முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து கலெக்டர் பேசுகையில், "கல்குவாரிகளை கண்காணிக்கவும், கனிமவளம் எடுத்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். நானும் ஆய்வு செய்து வருகிறேன். விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மாம்பழ விற்பனை சந்தை
மேலும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, "ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலுக்கு உரிய தொகையை 10 நாட்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டும். லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும். பனை மரத்தில் இருந்து பதனீர் எடுக்க அனுமதி கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு அனுமதியை உடனே கொடுக்க வேண்டும்" என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.விதிமீறல்கள் குறித்து புகார் கொடுத்த விவசாயிகளை கல்குவாரி உரிமையாளர்கள் மிரட்டுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தனர்.விதிமீறல்கள் குறித்து புகார் கொடுத்த விவசாயிகளை கல்குவாரி உரிமையாளர்கள் மிரட்டுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தனர்.விதிமீறல்கள் குறித்து புகார் கொடுத்த விவசாயிகளை கல்குவாரி உரிமையாளர்கள் மிரட்டுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தனர்.விதிமீறல்கள் குறித்து புகார் கொடுத்த விவசாயிகளை கல்குவாரி உரிமையாளர்கள் மிரட்டுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தனர்.விதிமீறல்கள் குறித்து புகார் கொடுத்த விவசாயிகளை கல்குவாரி உரிமையாளர்கள் மிரட்டுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தனர்.விதிமீறல்கள் குறித்து புகார் கொடுத்த விவசாயிகளை கல்குவாரி உரிமையாளர்கள் மிரட்டுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தனர்.