காட்டு யானை தாக்கி கன்றுகுட்டி சாவு


காட்டு யானை தாக்கி கன்றுகுட்டி சாவு
x

வேப்பனப்பள்ளி அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு யானை கன்றுகுட்டியை மிதித்து கொன்றது.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி வனபகுதியில் கடந்த 3 மாதங்களாக 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. சில நேரங்களில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அந்த யானைகளில் ஒரு யானை பிரிந்து சிகரளப்பள்ளி கிராமத்துக்குள் புகுந்தது. அங்கு நாகராஜன் என்பவரது விவசாய தோட்டத்தில் புகுந்த யானை அங்கிருந்த மாமரங்களை நாசம் செய்தது. தொடர்ந்து அங்கிருந்த மாட்டு தொழுவத்துக்குள் புகுந்த யானை, பசுங்கன்றை மிதித்து கொன்றது. யானையை கண்டு 10-க்கும் மேற்பட்ட மாடுகள் அங்கிருந்து ஓடின.

தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே 2 பேரை தாக்கிக்கொன்ற இந்த யானை தற்போது பசுங்கன்றையும் கொன்றுள்ளது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வனத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story