கன்றுக் குட்டியை கொன்றவர் கைது


கன்றுக் குட்டியை கொன்றவர் கைது
x

பத்தமடை அருகே கன்றுக் குட்டியை கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

பத்தமடை வயல்நம்பி குளத்தைச் சேர்ந்த இப்ராஹிம் (வயது 72) என்பவர் சம்பவத்தன்று அவருடைய மாடுகளை வீட்டிற்கு பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது தொழுவத்தில் கன்றுக்குட்டி இறந்து கிடந்தது. இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த மோசஸ் (35) என்பவர் இப்ராஹிம் மீது உள்ள முன்விரோதம் காரணமாக கன்றுக்குட்டியை கொன்றது தெரிந்து கேட்டதற்கு அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இப்ராஹிம் பத்தமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோசஸை கைது செய்தனர்.


Next Story