பொதுமக்கள் எதிர்ப்பை மீறி கல்குவாரி திறப்பு


பொதுமக்கள் எதிர்ப்பை மீறி கல்குவாரி திறப்பு
x

கருங்கல் அருகே பொதுமக்கள் எதிர்ப்பை மீறி கல்குவாரி திறக்கப்பட்டது. மேலும் அங்கு அசம்பாவித சம்பவத்தை தடுப்பதற்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே பொதுமக்கள் எதிர்ப்பை மீறி கல்குவாரி திறக்கப்பட்டது. மேலும் அங்கு அசம்பாவித சம்பவத்தை தடுப்பதற்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

கல்குவாரிக்கு எதிர்ப்பு

கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி கள்ளியங்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இது அரசு அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இக்குவாரியில் இருந்து பாறைகள் உடைக்கப்பட்டு தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் மற்றும் கடலோர பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தூண்டில் வளைவு பணிகளுக்கு கற்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இங்கு பாறைகள் உடைக்கப்படுவதால் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கீழ ஆப்பிகோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

போலீசார் குவிப்பு

இந்தநிலையில் பாறையை உடைத்து கற்கள் கொண்டு செல்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த கல்குவாரி நிர்வாகம் நேற்று காலை குவாரியில் இருந்து பாறைகள் உடைத்து கற்கள் எடுத்து செல்ல குவாரி திறக்கப்பட்டது. இதனால் இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தக்கூடும் என்ற நிலையில் கல்குவாரியில் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதைதொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பாறைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.


Next Story