விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 2 ஒட்டகங்கள் மீட்பு
சூளகிரி அருகேவிற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 2 ஒட்டகங்கள் மீட்கப்பட்டன.
கிருஷ்ணகிரி
சூளகிரி:
சூளகிரி அடுத்த திருமலை கவுனிகொட்டாயில் இறைச்சிக்காக ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து காமன்தொட்டி கிராம நிர்வாக அலுவலர் பாக்யராஜ் மற்றும் அலுவலா்கள் அங்கு விரைந்து சென்றனர். அலுவலர்களை பார்த்ததும் ஒட்டகத்தின் அருகில் இருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஓசூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சூளகிரி போலீசார் அங்கு சென்று 2 ஒட்டகங்களை மீட்டனர். இந்த ஒட்டகங்களை விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story