ஸ்டூடியோ பூட்டை உடைத்து கேமரா திருட்டு


ஸ்டூடியோ பூட்டை உடைத்து கேமரா திருட்டு
x

சானூரப்பட்டியில் ஸ்டூடியோ பூட்டை உடைத்து கேமரா திருடிய மா்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

வல்லம்,

தஞ்சை - திருச்சி சாலையில் உள்ள சானூரப்பட்டி கடைவீதியில் போட்டோ ஸ்டூடியோ இயங்கி வருகிறது.சம்பவத்தன்று இரவு ஸ்டூடியோவை பூட்டி விட்டு உரிமையாளர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஸ்டூடியோவில் இருந்த விலை உயர்ந்த கேமரா திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து உரிமையாளர் புகழேந்தி செங்கிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேமராவை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.


Next Story