தூய்மைப்பணி முகாம்
தூய்மைப்பணி முகாம் நடந்தது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் யூத் ரெட் கிராஸ், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இலுப்பைக்குடி ஊராட்சி இணைந்து நடத்திய் தூய்மைப் பணி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தொடங்கி வைத்தார். இலுப்பைக்குடி ஊராட்சி தலைவர் வைரமுத்து அன்பரசு முன்னிலை வகித்தார். இதில் யூத் ரெட் கிராஸ், நாட்டு நலப்பணி மாணவர்களும் இலுப்பைக்குடி ஊராட்சி தூய்மைப் பணியாளர்களும் பங்கேற்று கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தினர். தூய்மை பணி முகாம் ஏற்பாடுகளை யூத் ரெட் கிராஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வேலாயுத ராஜா மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் கவிதா, பாலசுப்ரமணியன், அழகர், சித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.
காரைக்குடி அழகப்பச் செட்டியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கல்லூரி வளாகத்தில் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் பழனி, துணை முதல்வர் பாஸ்கரன், உடற் கல்வித்துறை இயக்குனர் டாக்டர் ஆதிமூலம் ஆகியோர் கலந்துகொண்டனர். கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் அனைவரும் ஒரு நாள் முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.