திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்


திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
x

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு தேவையான உதவிகளான திருநங்கைகள் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, சுய உதவி குழுக்கள் மூலமாக வழங்கப்படும் மானியக்கடன்கள், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வழங்கப்படும் சுயதொழில் மானியம், ஓய்வூதியம் பெறுதல் போன்ற உதவிகளை அனைத்து திருநங்கைகளுக்கும் பெற்றுத்தரும் பொருட்டு சமூக நலத் துறையின் மூலம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் வருகிற 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story