மக்கள் தொடர்பு முகாம்


மக்கள் தொடர்பு முகாம்
x

மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை அருகே சிக்கல் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நாகை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். நாகை தாசில்தார் அமுதா முன்னிலை வகித்தார். முகாமில் பட்டா நகல், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, தையல் எந்திரங்கள் என 31 பேருக்கு ரூ.66 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முத்து முருகேச பாண்டியன், ஊராட்சி தலைவர் விமலா ராஜா, வருவாய் ஆய்வாளர்கள் அருண் குமார், புனிதா, கிராம நிர்வாக அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், பாக்கியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story