மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட முகாம்
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட முகாம் நடந்தது.
திருவாரூர்
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில் இந்திய தபால் துறை சார்பில் சிறப்பு சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் திருவாரூர் தலைமை தபால் நிலையத்தில் நடந்தது. முகாமிற்கு தலைமை தபால் நிலைய அதிகாரி மணிமேகலை தலைமை தாங்கினார். நாகை கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன், முத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கினை தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை வழங்கினார். இதில் திருவாரூர் வர்த்தகர் சங்க பொதுச்செயலாளர் குமரேசன், ரெயில்வே ஓய்வூதியர் சங்க தலைவர் தனசேகர், தபால் துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் கருணாநிதி, கலையரசி, கணினி மேற்பார்வையாளர் தங்கவேல், தலைமை தபால் அலுவலர்கள் சரஸ்வதி, கவிதா, மாரியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தபால் அலுவலர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story