பால் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பயிற்சி


பால் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பயிற்சி
x

பால் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடனை தாலுகா குஞ்சங்குளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பால் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கான சமுதாய பண்ணை பள்ளி பயிற்சி கிராம சேவை மைய கட்டிடத்தில் நடை பெற்றது. இதில் வட்டார அணி தலைவர் செல்வமணி, திட்ட செயலாக்குனர் சத்யா, தொழில்சார் சமூக வல்லுனர் டெய்சி அருள் ஜோதி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித் தனர். இதுகுறித்து வட்டார அணி தலைவர் செல்வமணி கூறியதாவது:-இந்த கிராமத்தில் கறவை மாடு வைத்துள்ள 30 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர் மூலம் பால் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு ஆண்டுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் அளிக்கப்படும். மாடுகளுக்கு சினை ஊசி காப்பீடு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு உற்பத்தியை பெருக்கி இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வழிகாட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story