கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


கிருஷ்ணகிரியில்  பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் சாலை வசதி, மின்சார வசதி, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 251 மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஊத்தங்கரை தாலுகா பாம்பாறு அணை இலங்கை வாழ் மக்கள் முகாமில் வசித்து வரும் செல்வகுமார் என்பவர் தான் பெயிண்டர் வேலை செய்து வருவதாகவும், தனது மகன் ரோபின்சன் (10) உடல் முழுவதும் கட்டிகள் ஏற்பட்டுள்ள நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை கேட்டு மனு கொடுத்தார்.

மனுவை பெற்று கொண்ட கலெக்டர், உடனடி நடவடிக்கையாக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டையை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சையத் அலி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story