மக்கள் தொடர்பு திட்ட முகாம்
மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
திருப்புவனம்,
திருப்புவனம் அடுத்த மேலவெள்ளூர் கிராமத்தில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், யூனியன் சேர்மன் சின்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களில் 56 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாறுதல் ஆகியவற்றிற்கான உத்தரவினை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
நிகழ்ச்சியில் யூனியன் துணைசேர்மன் மூர்த்தி, தாசில்தார் கண்ணன், சமூக நலத்திட்ட தாசில்தார் தனலெட்சுமி, யூனியன் ஆணையாளர் ராஜசேகரன், மண்டல துணை வட்டாட்சியர் பூங்குழலி, வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், வருவாய் அலுவலர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் போஸ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் தேவதாஸ், அறிவுக்கரசு மற்றும் வருவாய் துறையினர், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் நேற்று 35 மனுக்கள் புதிதாக பெறப்பட்டன.