வாக்காளர் சேர்த்தல், நீக்கல் முகாம்
சிங்கம்புணரி நகர் பகுதிகளில் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெற்றது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி நகர் பகுதிகளில் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெற்றது. குறிப்பாக வேட்டையன்பட்டி நடுநிலைபள்ளி எண் 6, சஞ்சீவிமலை பள்ளி எண் 3, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சீரணி அரங்கம் பின்புறம் பள்ளி எண் 1, ஆர்.எம்.சிங்கம்புணரி நகர் பகுதிகளில் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெற்றது.எஸ். மருத்துவமனை அருகில் பள்ளி எண் 2 ஆகிய பகுதிகளில் வாக்காளர் அட்டை சேர்த்தல் நீக்குதல் முகம் நடைபெற்றன. இந்த முகாமை பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், தி.மு.க. அவை தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் கதிர்வேல் உள்ளிட்டோர் கள ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியில் சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சிங்கம்புணரி ஒன்றிய பகுதிகளில் குறிப்பாக செல்லியம்பட்டி, பிரான்மலை, எம்.சூரக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் பூமிநாதன் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்