பந்தாரஅள்ளி ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
காரிமங்கலம்:
காரிமங்கலம் ஒன்றியம் பந்தாரஅள்ளி ஊராட்சி முள்ளனூர் கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். கால்நடை துறை உதவி இயக்குனர் மணிமாறன் முன்னிலை வகித்தார். இணை இயக்குனர் டாக்டர் சுவாமிநாதன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம் மற்றும் சினை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தாது உப்பு கலவை வழங்கி, கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கால்நடை வளர்ப்போருக்கு தீவனப்பயிர் சாகுபடி குறித்து விளக்கம் அளித்து, கன்று வளர்ப்பு நடைமுறைகள், மழைக்கால நோய் தடுப்பு முறைகள் மற்றும் கால்நடை காப்பீடு திட்டம் பற்றி எடுத்து கூறப்பட்டது. பின்னர் சிறந்த கால்நடைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் கலையரசி, ஆசைதம்பி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.