எச்.புதுப்பட்டியில் வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த எச்.புதுபட்டியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர்கள் முனிகிருஷ்ணன், ஜீவகலா, சுரேஷ், கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர் கலாவதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மார்க்ரெட் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் வழங்கப்படும் மானியங்கள் குறித்து பேசினர். முகாமில் விவசாயிகளிடமிருந்து அரசின் திட்டங்கள் மூலம் பயன் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதேபோல் பட்டுகோணம்பட்டி, மூக்காரெட்டிபட்டி, பூதநத்தம், பையர்நத்தம் ஆகிய ஊராட்சிகளிலும் வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
Next Story