பாலக்கோடு அருகே கால்நடை மருத்துவ முகாம்
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி ஊராட்சி பெரியானூர் கிராமத்தில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். முகாமில் பெரியானூர், புதுப்பேட்டை, ஏழு குண்டூர், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கால்நடைகளுக்கு மலடுநீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் குடற்புழு நீக்கம், மடி வீக்க நோய் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கால்நடைகளுக்கு தாது உப்பு வழங்கப்பட்டது. மேலும் சினை ஊசி போடப்பட்டது. முகாமில் உதவி இயக்குனர்கள் மணிமாறன், சண்முகசுந்தரம், கால்நடை உதவி டாக்டர்கள் தியாகசீலன், முத்து, கால்நடை ஆய்வாளர் மேரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு, சிகிச்சை அளித்தனர்.
Next Story