இலவச கண் மருத்துவ முகாம்
இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது
காளையார்கோவில்,
காளையார்கோவில் சுதந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்குடி லைன்ஸ் கிளப், மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சாா்பில் கண் மருத்துவ முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு காரைக்குடி லயன்ஸ் கிளப் தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் முத்து முன்னிலை வகித்தார். லயன்ஸ் கிளப் மண்டல தலைவர் தண்ணீர் மலை, வட்டார தலைவர் வைரவன் ஆகியோர் முகாமினை தொடங்கி வைத்தனர். பாலிடெக்னிக் கல்லூரியின் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சரவணன் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்தனர். கல்லூரியின் முதல்வர் பூப்பாண்டி உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் முகாமிற்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். முகாமில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.