தர்மபுரியில் வருகிற 24-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-கலெக்டர் சாந்தி தகவல்


தர்மபுரியில் வருகிற 24-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-கலெக்டர் சாந்தி தகவல்
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான விற்பனையாளர்கள், மார்க்கெட்டிங் பிரதிநிதிகள், மேற்பார்வையாளர்கள், மேலாளர்கள், கணினி ஆபரேட்டர்கள், கணக்காளர்கள், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து விதமான கல்வி தகுதி உடைய இளைஞர்கள், பெண்கள் பங்கேற்கலாம். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. அரசு துறைகளில் பணி வாய்ப்பை பெற அவர்களுடைய பதிவு மூப்பின்படி நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும். எனவே தனியார் துறைகளில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story