திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
தொண்டி,
திருவாடானையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்களின் நிர்வாக பொறுப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் யூனியன் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. வட்டார அணி தலைவர் சித்திரவேலு தலைமை தாங்கினார். அனைவரையும் திட்ட செயலாக்குனர் கலையரசன் வரவேற்றார். இதில் கலந்துகொண்ட திருவாடானை வட்டாரத்தை சேர்ந்த உற்பத்தியாளர் குழு நிர்வாக பொறுப்பாளர்களுக்கு பயிற்றுநர்கள் காயத்ரி, தீபா, மோனிஷா ஹன்சி, ஆரோக்கிய அனிட்டா பிரியா, ரேவதி ஆகியோர் பயிற்சி அளித்தனர். 3 நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் பொறுப்பாளர்களுக்கான கடமைகள், பொறுப்புகள், துணை குழுக்களின் கடமைகள், ஆவணங்கள், கோப்புகள் பாதுகாத்தல், குழு பதிவேடுகள் பராமரித்தல், மேலாண்மை அமைப்பு நிறுவுதல், குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிகள், தொழில்நுட்ப வசதிகள், செயலாக்கம் கண்காணித்தல் போன்ற தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் திட்ட வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. முடிவில் திட்ட செயலாக்குனர் திவ்யா நன்றி கூறினார்.